"கணவர் வீட்டில் கழிவறை இல்லை" - காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
x
கடலூர் மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரம்யா என்பவர் கடந்த மாதம் முன்பாக கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்தார். கார்த்திகேயன் வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவரது வீட்டில் கழிவறை இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ரம்யா தனது வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவரிடையே தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து மனமுடைந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன் பின்னர் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்