சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு - செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்த சயான்

கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து வெளியே வந்த சயான் செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது.
x
கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து வெளியே வந்த சயான் செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ் ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது வரை 220 பேரிடம் விசாரணை நடத்த பட்டு உள்ளது. இரண்டு நாடுகளுக்கு முன்பு மர வியாபாரி சஜீவன் சகோதரர் சுனில்யிடம் விசாரணை நடைப்பெற்ற நிலையில், நேற்று சயானிடம் விசாரணை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்