வங்கக் கடலில் உருவாகியுள்ள "அசானி" புயல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
x
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அசானி புயல் காரணமாக வருகிற 10ம் தேதி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 11ஆம் தேதி, ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புயலின் நகர்வுக்கு ஏற்ப தரைக் காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும் என்றும், இதனால், வரும் நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்