துறைமுக நிதி மோசடி... உதவி கண்காணிப்பாளர் கைது - சிபிஐ அதிரடி

துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி வழக்கில் துறைமுக உதவி கண்காணிப்பாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
x
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் 100 கோடி ரூபாய் வைப்பு நிதியை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது துறைமுகத்தின் துணை இயக்குனர் என ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா உள்ளிட்ட 23 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில், இரண்டு வெளிநாட்டவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, 11 பேரை கைது செய்ததுடன், 47 சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், சென்னை துறைமுகத்தின் உதவி கண்காணிப்பாளர் ரகு பெர்னார்ட் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்