இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ...!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
x
குராயூரைச் சேர்ந்த கார்த்திக், விக்னேஸ்வரன் சகோதரர்கள், இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மூலக்கரை அருகே வாகனம் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த விக்னேஷ்வரனின் தலை மீது, மற்றொரு வாகனம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்