மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.
x
கொரோனா பெருந்தொற்று பலர் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போட்டதோ, அதேபோல பலரது எதிர்காலத்தை தீர்மானிக்கவும் வழிகாட்டியுள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

எம்.சி.ஏ பயின்று வரும் இவர், கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்ட போது, தனது நிலத்தில் பண்டையை முறையில் பாரம்பரிய நெற்பயிர்களை விதைக்க தொடங்கியுள்ளார். தேவையான அளவு மழைப்பொழிவும் இருந்ததால், இயற்கை வேளாண்மை மூலம் அதிகளவில் வருமானமும் ஈட்டி வருகிறார்

சிபி மட்டுமல்ல அவருடன் இணைந்து நண்பர்கள் சிலரும் கல்லாங்குளம் சுற்று வட்டாரத்தில் 25க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதோடு, நல்ல வருமானமும் கிடைப்பதாக இந்த இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்