கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !
x
கொரோனா இறப்பு நிவாரணம் வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா இறப்பு நிவாரணம் பெற 54 ஆயிரம் 600 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் 38 ஆயிரத்து 500 விண்ணப்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 9 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 7 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி நிலவரப்படி, கொரோனாவால் இறந்தவர்களின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற அனைவருக்கும் இழப்பீடு வழங்க முயற்சி செய்யப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இதனிடையே, இந்த பொதுநல வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இழப்பீடு தொகையை முறையாக வழங்காத ஆந்திரா, பீகார் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தது.

Next Story

மேலும் செய்திகள்