லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.
x
விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது. விழுப்புரம் காமராஜர் வீதியில் பெரியாரின் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பெரியாரின் சிலை மீது மோதியது. இதில் அந்த சிலை பீடத்துடன் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்தனர். இதனிடையே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில் அந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதும், புதுச்சேரியில் இருந்து வாகன டயர்களை ஏற்றி வந்தபோது எதிர்பாராதவிதமாக பெரியாரின் சிலை மீது மோதியதும் தெரியவந்த‌து. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், லாரி ஓட்டுநரை தங்களிடம் ஒப்படைக்க கோரி போலீசாருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்