ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
x
கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் நெல்லை டவுன் பகுதியில் சிறுவன் மீட்கப்பட்டு, ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். யாரிடம் பேசாமல் அமைதியாக இருந்த சிறுவன், ஒருநாள் இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்துள்ளார். சிறுவனின் பெற்றோர் உட்பட அடிப்படை தகவலை பெறுவதற்காக, தொழுகை செய்யும் வீடியோவை சமூகவலைதளங்களில் காப்பக நிர்வாகிகள் வெளியிட்டனர். தன்னுடைய சொந்த ஊர் பீகார் மாநிலம், தர்பங்கா என்று சிறுவன் கூறியதை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தர்பங்கா மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டுள்ளார். சிறுவனின் பெயர் முகமது நிசார் என்பதும், அவரது தந்தை நூர் முகமது என்றும் தெரியவந்தது. இதையடுத்து நூர் முகமது திருநெல்வேலிக்கு அழைத்து வரப்பட்டு, ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில், அவரது மகன் முகமது நிசார் ஒப்படைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மகனை பார்த்த நூர் முகமது, கட்டி தழுவி கண்ணீர் வடித்தது சுற்றியுள்ளவர்களை நெகிழச் செய்தது. 


Next Story

மேலும் செய்திகள்