பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து

கோயம்பேட்டில் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பயணித்துள்ளார்கள்.
x
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன சென்னையில் இருந்து மட்டும் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக இன்று 1920 பேருந்துகள் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் என ஆறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது சென்னையில் இருந்து இதுவரை தமிழக அரசு பேருந்துகள் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். முதல் நாளில் 1.15 லட்சம் பேரும், நேற்று 1.85 லட்சம் பேரும் பயணம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. 5 ஆயிரம் பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டுள்ளன நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று கடைசி நேர பயணத்தை பெரும்பாலானவர்கள் மேற்கொள்வார்கள். இன்று 2,100 வழக்கமான பேருந்துகளுடன் 1,920 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,020 பேருந்துகள் இயக்கப்படுகின்றன கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று காலை முதல் அதிக அளவில் பயணிகள் வருகை உள்ளது. இன்று மாலை கூடுதலாக பேருந்து பயணிகள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு இன்று காலை முதல் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அதிக அளவில் பொது மக்கள் பயணித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்