திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
x
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைஷ்ணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். இதனையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்தவுடன் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சொர்க்க வாசலில் எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். இதன் பின்னர் பக்தர்களும் திரளாக ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதனிடையே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்