"பொங்கல் பரிசு பொருட்களை கண்காணிக்க வேண்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பரிசு பொருட்களில் தரமான பொருட்கள் வழங்குவதை நாடாளுமன்ற, சட்மன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
பொங்கல் பரிசு பொருட்களில் தரமான பொருட்கள் வழங்குவதை நாடாளுமன்ற, சட்மன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை நானே நேரில் சென்று நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
 மக்களிடையே இந்த திட்டத்திற்கு  பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்,சிலர் தவறான விஷத்தன்மை கருத்துக்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார். எனவே இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருவதை தரமான பொருட்கள் எவ்வித புகாரும் இன்றி அனைவரும் கிடைக்கப் பெறுவதை  உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணிகளை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்