"இனி பாமக தலைமையில்தான் கூட்டணி" - பாமக தீர்மானம்

2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே மணி,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என தெரிவித்தார். பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறினார்.  நகர்புற, பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பா.ம.க போட்டியிடும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்