மம்முட்டி நிலம் புறம்போக்கு நிலமா? விளக்கத்தை கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : டிசம்பர் 22, 2021, 10:24 AM
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மம்முட்டி தரப்பு விளக்கத்தையும் கேட்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் இருக்கும் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக அறிவித்து நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை,  கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் புறம்போக்கு நிலமாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மம்முட்டி தரப்பில் வாதிடப்பட்டது.

அதையேற்ற நீதிபதி, மமுட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், நிலம் தொடர்பான விவகாரத்தில் மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்பயும், நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

31 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

30 views

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

27 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

24 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

33 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.