மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்
x
கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில்,' கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, 2 ஆயிரத்து 766 கோடி ரூபாய்  தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது அந்த கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அதேபோல்  மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களுக்கான அசல், வட்டி மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்றும்  அரசாணை வெளியிடப்படும் நாள் வரை, குழுவால் கடன் தொகை பகுதியாக செலுத்தப்பட்டிருந்தால் எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது 

குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்கள் மட்டுமே தள்ளுபடிக்கான தகுதியுடையவர்கள் என்றும் ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களில் இருந்து பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் இதில் தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு ஊழியர்கள்,அவர்களின் குடும்பத்தினர், தொகுப்பூதிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு தள்ளுபடி இல்லை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்