இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு
x
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

அதில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் பாலியல் ரீதியிலான  தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி மேலாண்மை குழு உறுதி செய்ய வேண்டும் என்றும், பாலியல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க கற்பிக்கும் இடங்களில்1098 மற்றும்14417 என்ற புகார் எண்களை வைத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இல்லம் தேடி கல்வி மையங்களாக செயல்படும் இடங்கள், பொதுமக்கள் பார்வையில் இருக்க வேண்டும், குழந்தைகளிடம் பாலியல் ரீதியிலான செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபடுவதை தடுக்க பள்ளி மேலாண்மைக் குழு கண்காணிக்க வேண்டும்,

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கல்வி மையங்களுக்கு வரும் குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்க வேண்டும் எனவும், கற்றல் பணியை பெற்றோர் உடனிருந்து கண்காணிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்