நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரியும், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வழக்கு
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரியும், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக சார்பில்  தொடரப்பட்ட வழக்கில்,  அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள்,வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்த போதும், பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006 - 2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதால், தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து, அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த  உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்