உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா "அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்?" - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்? - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி
x
உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இருந்தாலும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நபர்களுக்கு இந்த சட்டம் அவசியம் என தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாக கொண்டு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயங்களை அரசு தடுக்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறினார். திருமணமாகி 3 வயது குழந்தை உள்ள பெண்கள் கரு முட்டைகளை தானமாக வழங்கலாம் என கூறியுள்ள நிலையில் திருமணமாத பெண்கள் கரு முட்டைகளை தானமாக வழங்க முடியாது என குறிப்பிடப்பட்டிருப்பது பாகுபாடு என அவர் தெரிவித்துள்ளார். வசதி கொண்ட நபர்கள் மட்டுமே இந்த தொழில்நுட்பங்களை பெறமுடியும் என்கிற சூழலில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பணமில்லாத நபர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே வாடகைத்தாய் மசோதா நிறைவேற்றப்பட்டு அவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், அவசரம் அவசரமாக இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் வினவியுள்ளார்.  இந்த இரண்டு சட்டங்களையும் ஏன் ஒன்றாக இணைக்க கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்