வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு

வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கால்வாயில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு
x
வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கால்வாயில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தென்பட்டது. ஊரப்பாக்கத்தில் பல்வேறு இடங்களில் நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் செல்ல முடியாமல், இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடும், கால்வாய் ஓரத்தில் கட்டப்பட்டுள்ளதால், மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டில் பள்ளம் உருவானது தெரிய வந்துள்ளது. இங்கு வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், வண்டலூர் வட்டாட்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கால்வாயில் நீர் செல்வதை தடுக்கும் வகையில் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விபத்து ஏற்பட்டுள்ள வீடும், இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்