முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை
x
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி,  2 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், அடுத்த பத்து ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் விதமாக, மேற்கண்ட மாநில நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

பொதுமக்களின் தங்கு தடையற்ற போக்குவரத்து உறுதிப்படுத்தப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசு, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அகலப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

நிலம் கையகப்படுத்துதல், மரங்களை வெட்டும் பணிகள் முடிந்த பின்னரே சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட சாலைகளில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தால், அவை உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்