மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மினி பேருந்துகள் ஆலந்தூர், விமானநிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், சென்னை மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்