உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க திட்டம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க திட்டம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
x
 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக விருப்ப மனு வழங்குதலை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 ஆகிய எண்களும், அருகில் உள்ள காவல் நிலையத்தின் புகார் எண்ணும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வெறும் புகார் எண்கள் மட்டும் போதாது என்று கூறிய அன்பில் மகேஷ், மாவட்டந்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்