தீண்டாமை சுவர் எழுப்பிய விவகாரம்; பெண்ணை கல்லால் தாக்கும் காட்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தீண்டாமை சுவர் எழுப்பிய விவகாரம்; பெண்ணை கல்லால் தாக்கும் காட்சி   - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
x
சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சேலம் அருகே நங்கவள்ளியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த சாலையை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி நிர்வாகம் ஒன்று சுவர் எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கார் நகர் மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர். இதனால் மற்றொரு தரப்பினர் கடந்த 17-ஆம் தேதி அம்பேத்கர் நகருக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதால் இரண்டு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இதில் ஐந்து பேர் காயமடைந்த மருத்துவ சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக இரண்டு தரப்பினரை சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகராறில் பெண்ணொருவர் அப்போது கல்லால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில்
 பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்