கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பாக இருங்கள் - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பாக இருங்கள் - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு
x
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது என்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் டிவிட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். தற்போது லேசான காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்