உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவி ஏற்பு - அனுபவமிக்க நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவி ஏற்பு - அனுபவமிக்க நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி
x
ராஜஸ்தானில் 1960ம் ஆண்டு பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி அம்மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். ரயில்வே, அணுசக்தி, போக்குவரத்து மற்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தை முனீஷ்வர் பண்டாரி பெற்றுள்ளார். குற்றவியல், அரசியலமைப்பு, சேவை மற்றும் தொழிலாளர் நல விவகாரங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடி உள்ளார். இதன் காரணமாக கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2019ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பதவி உயர்வு அடைந்த முனீஷ்வர் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். 60 வயதை கடந்த முனீஷ்வர் பண்டாரி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்