நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அதிகளவிலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும், நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணாபுரம், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், மணலி, எண்ணூர், இடயான்சாவடி உள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்