பயிர் காப்பீடு கால அவகாசம் - மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்

தமிழகத்தில் 26 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நவம்பர் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பயிர் காப்பீடு கால அவகாசம் - மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
x
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10 லட்சம் விவசாயிகள் சுமார் 25 லட்சம் ஏக்கர் பயிர் செய்துள்ள நிலையில், 

8 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திட்டமிட்டப்படி காப்பீடு செய்ய முடியாத விவசாயிகள், கால அவகாசத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நவம்பர் 15 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதியாக  நீட்டிக்க வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மழை காரணமாக இ சேவை மையங்கள் செயல்படாத நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, 
புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர்,


காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, 

தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயிர் காப்பீடுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.   


கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்