கொடைரோடு - ஆம்னி பேருந்தில் சோதனை - கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துக்கு அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.
x
தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழக அரசு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, மதுரை இணை போக்குவரத்து, ஆணையர் பொன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், தேனி ஆர்.டி.ஓ. மற்றும் வாகன போக்குவரத்து ஆய்வாளர் கொடை ரோடு பகுதியில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். கூடுதல் கட்டணம் வசூலித்த 4 பேருந்துகளுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலித்த அவர்கள், அளவுக்கு அதிகமான சுமை ஏற்றிவந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர். விடியவிடிய நடந்த சோதனையால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வழக்கமான டிக்கெட்டுக்கு பதிலாக கூடுதல் கட்டணம் வசூலித்த 12 ஆம்னி பேருந்துகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்,. மேலும் அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்