நகைகளை உருக்குவது தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக கோவில்களுக்கு அறங்காவர்கள் நியமிக்கும் வரை, நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைகளை உருக்குவது தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தமிழக கோவில்களுக்கு அறங்காவர்கள் நியமிக்கும் வரை, நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், காணிக்கையாக வந்த நகைகளை மட்டுமே உருக்குவதாகவும், நகைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றப்பட்டதன் மூலம் வருவாயாக கிடைத்த பதினொன்றரை கோடி ரூபாய் கோவில் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.அத்துடன் கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அரசு தரப்பு குறிப்பிட்ட போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது என்று தெரிவித்தனர்.இதையடுத்து, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என்று தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் என்றும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர்.









Next Story

மேலும் செய்திகள்