மறைமுக தேர்தலில் வாக்களிக்க சென்ற இரு கட்சி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு

தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
மறைமுக தேர்தலில் வாக்களிக்க சென்ற இரு கட்சி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு
x
தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது  அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 6 கவுன்சிலர்களும் திமுகவைச் சேர்ந்த 6 கவுன்சிலர்களும் இதில் அடங்குவார்கள். அப்போது அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கும் போது வாக்களிக்க செல்லும்போது திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது உறுப்பினர்களுடைய  கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் கவுன்சிலரின் சேலை இழுக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.  தற்போது அங்கு துணைத் தலைவர்  தேர்தலுக்கான தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கக் கூடிய ஒரு சூழல்தான் நிலவுகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்