மழையால் பயிர்கள் பாதிப்பு - அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முக்கியமாக செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, நெல், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதிகளை வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகள் குறித்து  கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, சேதம் மதிப்பு, நிவாரண பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்