காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
கடலூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் பொது பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் காவல் நிலையத்திலேயே போலீசார் சமரசம் செய்துள்ளனர்.இதை எதிர்த்து கொளஞ்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை திட்டக்குடி காவல் ஆய்வாளர் விசாரிக்க உத்தரவிட்டது. அவரும் வழக்கை  முடித்து வைத்துள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு கொளஞ்சியை மதுபோதையில் வழிமறித்த  ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி பொய் வழக்கில் கைது செய்துள்ளார். தையடுத்து, தன்னை சட்டவிரோதமாக கைது செய்து, தாக்கிய ராமநத்தம் ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் ரங்கநாதன், பெண் உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு எதிராக கொளஞ்சி,  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன்,  காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட கொளஞ்சிக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். 
இழப்பீட்டுத் தொகையை இவர்களிடம் வசூலிக்கவும், 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்