7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் "கல்விக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை" - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் கல்விக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை
x
7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்லி நிர்பந்தித்தால் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அண்ணா பல்கலைக் கழகம்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பரிந்துரைக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்