கொலு பொம்மைகள் விற்பனை மந்தம் - கவலை தெரிவிக்கும் பொம்மை உற்பத்தி கலைஞர்கள்

கொலு பொம்மைகள் விற்பனை மந்தம் - கவலை தெரிவிக்கும் பொம்மை உற்பத்தி கலைஞர்கள்
x
கொலு பொம்மைகள் விற்பனை மந்தம் - கவலை தெரிவிக்கும் பொம்மை உற்பத்தி கலைஞர்கள் 

கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கொழு பொம்மை விற்பனை மந்தமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ள விளாச்சேரி பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பாரம்பரியமான முறையில் கிறிஸ்துமஸ் பொம்மைகள், விநாயகர் சிலைகள், மற்றும் நவராத்திரி கொலு பொம்மைகள் தயார் செய்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை களைகட்ட தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் காரணமாக  விற்பனை மந்தமாக உள்ளதாக பொம்மை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஏரிகளில் நீர் நிரம்பி காணப்படுவதால், களிமண் எடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொம்மை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்