அக்.6ம் தேதி துவங்கும் நவராத்திரி விழா - சூடு பிடித்த கொலு பொம்மை விற்பனை

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
x
நவராத்திரி விழா வரும் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்துக்கள் தங்கள் வீடுகளில் 9 நாட்களும் கொலு அமைத்து அதில் அனைத்து சாமி சிலைகளையும் வைத்து வழிபடுவர். அந்த வகையில் நவராத்திரிக்காக, கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி, தூத்துக்குடி சிவன் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முருகன், விநாயகர், ராமர், மீனாட்சி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன், தாசவரதார சிலைகள், கார்த்திகைப் பெண்கள் மற்றும் கல்யாண வளைகாப்பு, போன்ற 21 வகையான செட் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பொம்மைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மிகவும் கலை நயத்துடன் இந்த கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கொலு பொம்மைகளை வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்