"ஸ்மார்ட் ரேஷன் கார்டு - 10.54 லட்சம் விண்ணப்பம்"

புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி, செப்டம்பர் 26ஆம் தேதி வரை, 10 லட்சத்து 54 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு - 10.54 லட்சம் விண்ணப்பம்
x
புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி, செப்டம்பர் 26ஆம் தேதி வரை, 10 லட்சத்து 54 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மே மாதம் முதல்  செப்டம்பர் 26ம் தேதி வரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், அதில், 7 லட்சத்து 28 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 2 லட்சத்து 61 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களில், 6 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 63 ஆயிரத்து 780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும், உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தென் சென்னையில் 67 ஆயிரத்து 51 பேரும், வட சென்னையில், 55 ஆயிரத்து 962 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் கோவை மாவட்டத்தில் 65 ஆயிரத்து 3 பேரும், சேலம் மாவட்டத்தில் 59 ஆயிரத்து 495 பேரும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்