"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.
x
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14 ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழக அரசு சார்பில். காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை, செப்டம்பர்  23 வரையிலான 37.3 டிஎம்சி காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன், அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டை உடனே வழங்க, கார்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்