அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பு பண்ணை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி
x
பார்த்தாலே குலை நடுங்க வைக்கும் பாம்புகளை பிடித்து, சுற்றுலா பயணிகளுக்கு காட்சிப்படுத்தும் இடம் தான் இந்த பாம்பு பண்ணை... ஊரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்கம் சார்பில் மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வருகிறது இந்த பாம்பு பண்ணை.

பழங்குடி இருளர்கள் 400 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்கள் மூலம் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து கொடிய விஷபாம்புகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த இந்த பாம்பு பண்ணை, அரசு அறிவித்த தளர்வுகளை அடுத்து 6 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் குழந்தைகளுடன் பண்ணைக்கு படையெடுக்க, அவர்களுக்கு கொடிய விஷ பாம்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பாம்புகள் செயல்பாடு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டன.

எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊழியர்கள், பார்வையாளர்களுக்கு தெளிவுப்படுத்தினர். இதுமட்டுமல்ல, சுற்றுலா பயணிகள் முன்னிலையில் பாம்புகளில் இருந்து விஷமெடுத்தும் பத்திரப்படுத்தப்பட்டது. இந்த விஷமாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் பல்வேறு தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. பார்க்கும்போது அச்சமூட்டினாலும், பயனுள்ள பொழுதுபோக்கு தளமாக இருக்கும் இந்த பாம்பு பண்ணை, பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்