காட்பாடி ஒன்றிய அலுவலக மோதல்: அதிமுகவினர் மீது வழக்கு-3 பேர் கைது

காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக அதிமுகவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டதை அடுத்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
x
காட்பாடி ஒன்றியம் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பாக அம்பிகாவும், மாற்று வேட்பாளராக ரேவதியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். சனிக்கிழமை மாற்று வேட்பாளர் ரேவதி தனது மனுவை வாபஸ் பெற காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்த போது, தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர் அம்பிகாவிடமும் வேட்பு மனுவை வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்து பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்து வந்த வேலூர் அதிமுக செயலர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்த குமார் தலைமையில் திமுகவினரும் அங்கு வந்தனர். திமுகவினரின் சதியால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில் அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மீது காட்பாடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக பகுதி செயலாளர் ஜனார்தனன், முன்னால் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் அமர்நாத் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்