இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
x
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து சிவக்குமார் தனது பைபர் படகில் உறவினர்களான சிவா மற்றும் சின்னத்தம்பியுடன் மீன்டிபிடிக்க சென்றுள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள்  மீன்வர்களின் படகை வழி மறித்துள்ளனர். கத்தியுடன் மீனவர்களின் படகிற்கு வந்த அவர்கள் சிவக்குமாரை தலையில் பலமாக தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்த  வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் உயிர்பிழைத்து ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு மீனவர்கள் வர, வெட்டுக் காயமடைந்த சிவக்குமாருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சிவக்குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்