7.5 % இட ஒதுக்கீடு - விசாரணை தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
7.5 % இட ஒதுக்கீடு - விசாரணை தள்ளிவைப்பு
x
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் இயற்றியது. இதை ரத்து செய்ய கோரியும், தங்களுக்கும்  7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிடகோரியும் தனியார் பள்ளி மாணவர்களும், தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது  அரசு  தலைமை வழக்கறிஞர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை , நீட் தேர்வு பாதிப்பு குறித்த அறிக்கைகளை  படித்து பார்த்து வாதிட வேண்டி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரினார். அரசு பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்ஆட்சேபம் தெரிவித்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை  அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்