சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 03:35 PM
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


அதன்படி, போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர், கோயம்பேடு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திருப்பி விடப்பட்டுள்ளது.

போரூர் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம், 2-வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம்.

மாறாக கோயம்பேடு செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்புக்கு செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு சென்று அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு வரை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.  

இதேபோல் பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து அசோக் நகர் காவல் நிலையம் வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அசோக் நகர் காவல் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் சாலை வழியாக பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


நெருக்கமான பகுதிகள் என்பதால், மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதுவரை போலீசார் போக்குவரத்தை கண்காணித்து உதவ வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

56 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

46 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

26 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

6 views

பிற செய்திகள்

மானியக் கோரிக்கை திட்டங்கள் - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கை திட்டங்கள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

1 views

நள்ளிரவில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.

7 views

சொந்தவீட்டில் நூதனமாக நகைகள் திருட்டு - உறவினர்கள்,கணவரையும் ஏமாற்றி கொள்ளை

உடுமலை அருகே உறவினர்களையும்,கணவரையும் ஏமாற்றி, சொந்த வீட்டில் நூதனமாக நகை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

6 views

தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கானில்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற தலிபான்களின் கட்டளையை ஏராளமான ஆப்கன் பெண்கள் மீறி வருகின்றனர். இதைப் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....

51 views

பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் - கடன்களை நிறுத்திய உலக வங்கி

ஆபாகானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வறுமை வெகுவாக அதிகரித்து வருகிறது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.