மேய்க்கால் புறம்போக்கு நில விவகாரம் - தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேய்க்கால் புறம்போக்கு நில விவகாரம் - தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
x
தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மக்கள் தொகை அதிகரிப்பு,  தொழிற்சாலைகள் துவங்க விலக்களிக்கப்படுவதாகவும், இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, குடியிருப்புகளுக்கும்,  தொழில்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்