குப்பை கிடங்காக மாறியுள்ள நம்பியாறு அணை - தூய்மைப்படுத்தி தர விவசாயிகள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நம்பியாறு அணை சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமித்து குப்பை கிடங்காக மாறியுள்ளதால் அதனை தூய்மைபடுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை கிடங்காக மாறியுள்ள நம்பியாறு அணை - தூய்மைப்படுத்தி தர விவசாயிகள் கோரிக்கை
x
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நம்பியாறு அணை சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமித்து குப்பை கிடங்காக மாறியுள்ளதால் அதனை தூய்மைபடுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 29 கோடியில் கட்டப்பட்டு அணை திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் பல இடங்களில் கால்வாய்கள் இடிந்தும் , சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமித்து குப்பை கிடங்காக மாறி உள்ளது. பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் நம்பியாறு பாசன கால்வாயை மழை காலத்திற்குள் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்