தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலி : விஷ வாயு தாக்கியதில் பலியான சோகம்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 02:54 PM
சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் புதிதாக அதே பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதனிடையே பல மாதங்களாக மூடிக்கிடந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆள் தேவை என கொரட்டூரை சேர்ந்த ராஜ்பாபு என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து திருவேற்காட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் திப்பு சுல்தான் என 2 பேர் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது தொட்டியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷ வாயு தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் பாலு மற்றும் காண்டிராக்டர் ராஜ்பாபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

70 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

45 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

21 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

6மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு - 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி அசத்தல்

இந்தியாவில் ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைவருவருக்கும் நூறு சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

5 views

கொடநாடு வழக்கில் தொடரும் விசாரணை : குற்றம் சாட்டப்பட்ட 4வது நபர் ஜம்சீர் அலி நேரில் ஆஜர்

கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 வது நபரான ஜம்சீர் அலி நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 views

மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி கோரி மனு - ஸ்டெர்லைட் வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் மூலப்பெருட்களை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

7 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

10 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் டேனில் மெத்வதேவ் - அவரின் வெற்றிப் பயணம்...

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டுள்ளார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.