நாளை நீட் தேர்வு : தமிழகத்தில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.
x
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? கல்வியாளர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்க்கலாம்...

கொரோனா பரவலால் தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற சூழல் இருந்த சமயத்தில், பலகட்ட ஆலோசனைக்கு பின்னர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது திமுக அரசு.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என கேள்வியும் எழுந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் சிறு நம்பிக்கை இருந்தது.

இருப்பினும் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகினர்

ஞாயிறு அன்று நாடு முழுவதும் 202 நகரங்களிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலூர், நெல்லை, திருச்சி, திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், நாமக்கல், நாகர்கோவில், மதுரை, கரூர், காஞ்சிபுரம், கடலூர், கோவை, சென்னை ஆகிய 14 நகரங்களில் 500க்கும் அதிகமான மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. 

இதில் அரசு பள்ளி மாணவர்கள் 8 ஆயிரம் பேர் உட்பட ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 

பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா பரவல், நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல தடங்கல்கள் இருந்தாலும், அதனை எதிர்கொண்டு தேர்வுக்கு தயாராக உள்ளதாக மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்



Next Story

மேலும் செய்திகள்