"செப். 11-ல் ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 10, 2021, 06:45 PM
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

செப்டம்பர் 11ஆம் தேதி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

பாரதியார் நினைவுநாளில் மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தப்படும் என்றும் 

ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் பாரதி இளம்கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக மாணவர்களுக்கு வழங்கப்படும், 

அவரின் வாழ்க்கை மற்றும் படைப்பு குறித்து ஆய்வு செய்த அறிஞர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசுடன் விருது வழங்கப்படும்,  

பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர் குடும்பத்தாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மூத்த ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன், பேராசிரியர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்றும் 

எட்டயபுரம், சென்னை, மதுரையில் பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அடுத்த ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றும் 

 ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார பூங்காவிற்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

153 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து

கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.

1 views

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்துகின்றனர்

5 views

முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த, பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

9 views

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

13 views

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் மரணம் - விலங்குகள் நல ஆர்வலர் புகார்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

16 views

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.