தமிழக ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
x
தமிழக ஆளுராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக இருந்த நிலையில் அம்மாநிலத்திற்கான ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி ஆகும். 1976ம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், கடைசியாக 2012ம் ஆண்டு நுண்ணறிவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.  2018ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும், பணியாற்றினார். 2019ம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்தார். அங்கு  நாகா ஆயுதக்குழுவுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ரவி முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்