கர்நாடகாவில் சந்தனமரம் வெட்டி கடத்தல் - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

சந்தன மரம் கடத்தியதில் தலைமறைவான நபர்களை, வேப்பனப்பள்ளியில் கர்நாடக போலீசார் தேடி தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் சந்தனமரம் வெட்டி கடத்தல் - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கம்பள புரா -ஹரகலதேவி வனப்பகுதியில் மிகப் பெரிய சந்தன மரங்கள்  உள்ளன. சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய மலைகள் சிறு குன்றுகள், வனப்பகுதிகள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி கடத்த திட்டமிட்டிருந்த, தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச்மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா  ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய நபர்களை பிடிப்பதற்காக,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வந்தனர். 
பிடிபட்ட கைதிகளை அழைத்து வந்த கர்நாடக போலீசார் இருளர் காலனிக்கு தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்