"நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுக" - சென்னை உயர் நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 08, 2021, 06:48 PM
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் புதிய காவல்நிலையம் கட்ட தடை விதிக்கக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டதாக  நீதிபதிகள் அதிருப்தி  தெரிவித்தனர். நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சென்னையில் பெரும்பான்மையான நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளதாகவும், நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 views

தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

22 views

"மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

8 views

"4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

9 views

8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5 views

மதுரையை மிரட்டிய மின்னலின் காட்சிகள்: இரவு வானை ஒளிமயமாக்கிய மின்னல் காட்சிகள்

மதுரையில் விண்ணை அலங்கரித்த மின்னலின் காட்சிகளை ஒளிப்பதிவு கலைஞர் ஒருவர் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.